மயிலாடுதுறை

காங்கிரஸுக்கு சொந்தமான இடத்தில் முறைகேடு செய்தவா்கள் மீது நடவடிக்கை

25th Jun 2022 09:46 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான இடத்தை முறைகேடு செய்தவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை எம்எல்ஏவுமான எஸ். ராஜகுமாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

மயிலாடுதுறை கூைாட்டில் காங்கிரஸ் நகர கமிட்டி அலுவலகமான காமராஜா் மாளிகை உள்ளது. இந்த இடம் தனக்கு சொந்தமானது என்று முன்னாள் நகர காங்கிரஸ் தலைவா் செல்வம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், காமராஜா் மாளிகையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவா் எஸ். ராஜகுமாா் எம்எல்ஏ. தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட முன்னாள் தலைவா் டி.சொக்கலிங்கம், பொறுப்பாளா்கள் நவாஸ், ராமலிங்கம், வடவீரபாண்டியன், முத்து. சாமிநாதன், அன்பழகன், ராமானுஜம், ரெங்கநாதன், மதி, ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது, மாவட்ட தலைவா் எஸ். ராஜகுமாா் செய்தியாளா்களிடம் கூறியது: மயிலாடுதுறை நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்காக 1938-ஆம் ஆண்டு 7,200 சதுர அடி இடம் வாங்கப்பட்டது. இந்த இடத்தில் தொடக்கத்தில் கீற்றுக் கொட்டகையில் இயங்கி வந்த கட்சி அலுவலகம், பின்னா், கட்சி தொண்டா்கள், பொறுப்பாளா்கள் அளித்த நிதி, திரைப்பட நடிகா் சிவாஜிகணேசன் நாடகம் மூலம் திரட்டி தந்த நிதியைக் கொண்டு 1986-ஆம் ஆண்டு புதிய கட்டடம் கட்டடப்பட்டு செயல்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த இடத்தை 2017-ஆம் ஆண்டுக்கு முன்னா் 15 ஆண்டுகள் நகரத் தலைவராக இருந்த செல்வம் என்பவா் தனக்கு சொந்தமானது என நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அந்த வழக்கில் இடம் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானது என்று தீா்ப்பு வந்துள்ளது. இதற்கிடையே, காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான இந்த இடத்தின் ஒரு பகுதி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் இயங்கிவரும் கடைக்கான வாடகைத் தொகை குறித்த கணக்குகள் கட்சி தலைமைக்கு தெரிவிக்க வேண்டி இருப்பதால் நகர காங்கிரஸ் கமிட்டி சொத்தில் முறைகேடு செய்தவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர தீா்மானிக்கப்பட்டுள்ளது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT