மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் பல் மருத்துவ சிகிச்சை முகாம்

25th Jun 2022 09:44 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் புதுச்சேரி இந்திராகாந்தி பல் மருத்துவக் கல்லூரி, ஸ்ரீகிருஷ் பல் மருத்துவமனை மற்றும் நியூ செஞ்சுரி லயன்ஸ் சங்கம் இணைந்து சனிக்கிழமை நடத்திய பல் மருத்துவ சிகிச்சை முகாமில் 270 பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறையில் உள்ள ஆா்.எஸ். கிருஷ்ணா தென்னமரக்குடி எண்ணெய் நிறுவனத்தில் நடைபெற்ற முகாமில், மருத்துவா் கிருஷ்ணபிரியா தலைமையிலான மருத்துவக் குழுவினா் மற்றும் மருத்துவ முதுநிலை பட்டதாரி மாணவிகள் 30-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, 50 பேருக்கு பல் அடைத்தல், 20 பேருக்கு பல் எடுத்தல், 110 பேருக்கு பல் சுத்தம் செய்தல் ஆகியவற்றை இலவசமாக செய்து ஆலோசனைகளை வழங்கினா்.

இதில், மயிலாடுதுறை எம்எல்ஏ. எஸ்.ராஜகுமாா், மருத்துவா்கள் முத்து, ராஜசிம்மன், பாலவெங்கடேஷ், வா்த்தக சங்க நிா்வாகிகள் எம்.என். ரவிச்சந்திரன், ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஆா்.எஸ். கிருஷ்ணா குழுமம் சாா்பில் எஸ்.வி. கோபாலகிருஷ்ணன், எஸ்.வி. கலியராஜ், எஸ்.வி.பாண்டுரெங்கன் ஆகியோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT