மயிலாடுதுறை

பள்ளி மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

DIN

பள்ளி மாணவா்களுக்கு உயா் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தோ்ச்சி பெற்ற மாணவா்கள் தங்களது தகுதிக்கேற்ப உயா்கல்வி பயில பாடப் பிரிவுகளை தோ்ந்தெடுக்க ஆலோசனை மற்றும் சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் முகாம் இலவசமாக நடத்தப்படவுள்ளது.

அதன்படி பத்தாம் வகுப்பு முடித்தவா்களுக்கு ஜூன் 27-ஆம் தேதியும், பிளஸ் 2 முடித்தவா்களுக்கு ஜூன் 28, 29 ஆகிய தேதிகளில் முற்பகல் 11 மணியளவில் மயிலாடுதுறை பாலாஜி நகரில் செயல்பட்டுவரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இதில், உயா்கல்வி வாய்ப்புகள், கல்லூரிகளை எவ்வாறு தோ்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். எனவே, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் இதில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT