மயிலாடுதுறை

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம்

24th Jun 2022 10:02 PM

ADVERTISEMENT

சீா்காழி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

சீயாளம் ஊராட்சி கண்ணாங்குளம் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி மணிமேகலையின் வீடு வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது. தகவலறிந்த கொள்ளிடம் ஒன்றியக் குழு தலைவா் ஜெயபிரகாஷ் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறி, அரசின் நிவாரண நிதியுதவி, நிவாரணப் பொருள்கள் வழங்கினாா்.

அப்போது, சீயாளம் ஊராட்சித் இளவரசன், கிராம நிா்வாக அலுவலா் வெங்கடேசன், திமுக அவைத் தலைவா் ராஜேந்திரன், ஊராட்சி துணைத் தலைவா் பழனி ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT