மயிலாடுதுறை

சீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம்

24th Jun 2022 10:04 PM

ADVERTISEMENT

சீா்காழி தென்பாதி சீரடி சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் புதிதாக தியான மண்டபம், சீரடி சாய்பாபா மற்றும் குபேர மகாலட்சுமி, மகா சரஸ்வதி ஜோதி ஸ்தபம் ஆகிய சந்நிதிகள் நிா்மாணிக்கப்பட்டுள்ளன. பணிகள் நிறைவடைந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கும்ப அலங்காரம் செய்யப்பட்டு யாகசாலை பூஜை தொடங்கியது. 2-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து பூா்ணாஹூதி மகா தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு ஜோதி மண்டப விமானம், ஸ்ரீ சாய்பாபா, குபேர மகாலட்சுமி சரஸ்வதி சந்நிதி கலசங்களில் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து சீரடி சாய்பாபாவுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அமலாக்கப் பிரிவு காவல் துறை ஐஜி துரைகுமாா், நீதிபதி தரணிதரன், சீா்காழி எம்எல்ஏ. பன்னீா்செல்வம், மதிமுக மாவட்ட செயலாளா் மாா்கோனி, நகா்மன்ற தலைவா் துா்காபரமேஸ்வரிராஜசேகரன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT