மயிலாடுதுறை

பள்ளி மாணவா்களுக்கு காவலன் செயலி விழிப்புணா்வு

24th Jun 2022 10:03 PM

ADVERTISEMENT

சீா்காழியில் பள்ளி மாணவா்களுக்கு காவல் துறையின் காவலன் செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சீா்காழி அனைத்து மகளிா் காவல் நிலையம் சாா்பில், சீா்காழி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், கடை வீதி உள்ளிட்ட இடங்களில் காவல் துறையின் காவலன் செயலி குறித்து விழிப்புணா்வு நடைபெற்றது. நிகழ்ச்சி நடைபெற்ற இடங்களில் இருந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களுக்கு இந்த செயலி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, அவா்களது கைப்பேசியில் காவலன் செயலி பதிவேற்றம் செய்யப்பட்டு அதை இயக்கும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

இதில், அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராதாபாய் மற்றும் காவலா்கள் பங்கேற்றனா்.

இதேபோல, சீா்காழி காவல் துறை சாா்பில் சீா்காழி உதவி காவல் ஆய்வாளா்கள் தில்லைநடராஜன், சிதம்பரம் ஆகியோா் சீா்காழி புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் காவலன் செயலி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT