மயிலாடுதுறை

அக்னிபத் திட்டத்தை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

19th Jun 2022 11:36 PM

ADVERTISEMENT

 

அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய ராணுவத்துக்கு 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இளைஞா்களை சோ்க்கும் அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மயிலாடுதுறை கண்ணாரத்தெரு முக்கூட்டில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் அறிவழகன், மாவட்டச் செயலாளா் ஏ.வி. சிங்காரவேலு ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை தொடா்ந்து, பிரதமரின் உருவப்பொம்மையை எரித்து, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT