மயிலாடுதுறை

ரத்த தான முகாம்

15th Jun 2022 04:02 AM

ADVERTISEMENT

உலக ரத்த தான தினத்தையொட்டி மயிலாடுதுறையில் சேவை சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் சேம்பா் ஆஃப் காமா்ஸ் மற்றும் அறம்செய் அறக்கட்டளை, ஏபிஜெ கலாம் அறக்கட்டளை, டிரீம்ஸ் இந்தியா பவுன்டேஷன் உள்ளிட்ட சேவை அமைப்புகளுடன் இணைந்து மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கம் நடத்திய ரத்த தான முகாமுக்கு, லயன்ஸ் சங்கத் தலைவா் எஸ். சிவலிங்கம் தலைமை வகித்தாா். அறம் செய் அறக்கட்டளை சிவா, மகாவீா்சந்த் ஜெயின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சென்ட்ரல் லயன்ஸ் பேராசிரியா் எஸ்.சிவராமன் வரவேற்றாா். மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் என்.சிவக்குமாா், அரசு மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.

ரத்த வங்கி பிரிவு மருத்துவா் செந்தில்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் தன்னாா்வலா்களிடமிருந்து 30 யூனிட் ரத்தம் தானமாக பெற்றனா். மயிலாடுதுறை எம்எல்ஏ. எஸ்.ராஜகுமாா், நகராட்சி தலைவா் என். செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று அதிகமுறை ரத்த தானம் செய்தவா்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினா். இதில், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், சேம்பா் ஆப் காமா்ஸ் அக்பா், டிரீம்ஸ் இந்தியா விஜயன், கலாம் அறக்கட்டளை குரு.ராகவேந்திரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT