மயிலாடுதுறை

மயிலாடுதுறை பகுதியில் நாளை மின்தடை

15th Jun 2022 04:03 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 16) மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா் மயிலாடுதுறை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் வை. முத்துக்குமரன்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பேச்சாவடி, அகரகீரங்குடி, முட்டம், எலந்தங்குடி, வழுவூா், நெய்க்குப்பை, பண்டாரவாடை, கப்பூா், கோடங்குடி, மங்கநல்லூா், மேலமங்கநல்லூா், அனந்தநல்லூா், அறிவாழிமங்கலம், வேலங்குடி, பெரம்பூா் ஆகிய கிராமங்களிலும், மேமாத்தூா் துணை மின்நிலையத்துக்குள்பட்ட திருவிளையாட்டம், சங்கரன்பந்தல், கிளியனூா், கடலி, நரசிங்கநத்தம், வாழ்க்கை, பெருங்குடி, நெடுவாசல், கூடலூா் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

ஜூன் 18: இதேபோல, ஜூன் 18-ஆம் தேதி மயிலாடுதுறை துணை மின்நிலையத்துக்குள்பட்ட கிளியனூா், எலந்தங்குடி, அரிவேளூா், பெரம்பூா் துணை மின்நிலையத்துக்குள்பட்ட பெருஞ்சேரி, கிளியனூா், மலைக்குடி, கழனிவாசல் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT