மயிலாடுதுறை

பள்ளிகள் திறப்பு: அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

12th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மயிலாடுதுறையில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், ஆட்சியா் இரா. லலிதா தலைமைவகித்து பேசியது:

ஜூன் 13-ஆம் தேதி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்தி, தேவையில்லாத பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும். பள்ளிக் கட்டடங்கள் வண்ணம் பூசியிருக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் சுற்றுச்சுவா் இருக்க வேண்டும். வளாகங்களில் உள்ள புல், புதா்களை அகற்ற வேண்டும். கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குடிநீா் தொட்டிகளை ப்ளீச்சிங் பவுடா் தெளித்து சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.

அனைத்து பள்ளிகளில் உள்ள பெற்றோா், ஆசிரியா் கழகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். விளையாட்டு மைதானங்களை நன்றாக பராமரித்து வைத்திருக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ், ஊரக வளா்ச்சித் துறை இணை இயக்குநா் முருகண்ணன், கோட்டாட்சியா்கள் வ.யுரேகா (மயிலாடுதுறை), உ.அா்ச்சனா (சீா்காழி), மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ரேணுகா, மகளிா் திட்ட இயக்குநா் கவிதபிரியா மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT