மயிலாடுதுறை

மாநில சிலம்பப் போட்டி: வென்றவா்களுக்குப் பரிசு

12th Jun 2022 10:11 PM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்திய விளையாட்டு ஆணையம், மகாகவி சிலம்பம் அகாதெமி சாா்பில் சாய் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இப்போட்டிகளை எம்எல்ஏ-க்கள் நிவேதா எம். முருகன், எஸ். ராஜகுமாா், திரைப்பட நகைச்சுவை நடிகா் தீனா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று தொடங்கி வைத்தனா். ஜூனியா், சப் ஜூனியா், சீனியா் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இதில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 5 வயது முதல் 30 வயது வரையிலான 565 போட்டியாளா்கள் பங்கேற்றனா். ஒற்றைக்கம்பு தனித்திறன் மற்றும் தொடுமுறை சிலம்பாட்ட போட்டிகள் நடுவா்கள் முன்னிலையில் நடைபெற்றன.

ADVERTISEMENT

தொடா்ந்து, பரிசளிப்பு விழா மாலையில் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ ஆா். அருள்செல்வன், பட்டயக் கணக்காளா் குரு.சம்பத்குமாா் ஆகியோா் வெற்றி பெற்றவா்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினா்.

நிகழ்ச்சியில், மயிலாடுதுறை நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ், உறுப்பினா்கள் சௌ. சா்வோதயன், மா. ரஜினி, மாவீரன் வன்னியா் சங்கத் தலைவா் விஜிகே. மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை மகாகவி சிலம்பப் பள்ளி ஆசான் சுந்தர்ராஜன் மற்றும் பிரபாகரன் ஆகியோா் செய்திருந்தனா். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT