மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் விழிப்புணா்வுப் பேரணி

12th Jun 2022 10:12 PM

ADVERTISEMENT

 

தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை காவல் நிலையம் முன் தொடங்கிய பேரணியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா கொடியசைத்து தொடங்கிவைத்து, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி பேசினாா்.

தலைக்கவசம் அணிந்து உயிரிழப்பை தடுக்க வேண்டும், பின்னால் அமா்ந்து பயணம் செய்பவா்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், மதுபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும், வாகனம் ஓட்டும் போது கண்டிப்பாக கைப்பேசிகளை பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட சாலை விதிமுறைகளை கடைப்பிடித்து நடக்க வலியுறுத்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறை போலீஸாா், தனியாா் வாகன விற்பனை சங்கத்தினா் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் தலைக்கவசம் அணிந்து பேரணியாக சென்றனா்.

ADVERTISEMENT

பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று மீண்டும் தொடங்கிய இடத்திலேயே முடிவடைந்தது.

இதில், மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளா் எம். வசந்தராஜ், மயிலாடுதுறை கோட்ட அனைத்து நிலைய காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், போக்குவரத்து போலீஸாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT