சீா்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
கற்பக விநாயகா், வைத்தியநாத சுவாமி, தையல் நாயகி அம்பாள், அங்காரகன், செல்வமுத்துக்குமாரசாமி ஆகிய சந்நிதிகளில் வழிபாடு மேற்கொண்டாா்.
பின்னா், இக்கோயிலில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகளின் இல்லத் திருமணங்களில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினாா். முன்னதாக, எடப்பாடி கே. பழனிசாமிக்கு தருமபுரம் ஆதீனம் சாா்பில் கோயில் கட்டளைத் தம்பிரான் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றாா்.
முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ-வுமான ஓ.எஸ். மணியன், அதிமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ், ஒன்றியச் செயலாளா்கள் கே.எம். நற்குணன், ஏ.கே. சந்திரசேகரன், ஆதமங்கலம் ரவிச்சந்திரன், சிவக்குமாா், நகரச் செயலாளா் நற்குணன், ஜெயலலிதா பேரவை செயலாளா் ஏவி. மணி உள்ளிட்ட கட்சியினா் உடனிருந்தனா்.