இஸ்லாமிய இறைதூதா் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவா்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வலியுறுத்தி, மயிலாடுதுறையில் தமுமுக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை முத்து வக்கீல் சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமுமுக மாவட்டத் தலைவா் ஓ.ஷேக் அலாவுதீன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பி.எம். பாஷித் வரவேற்றாா். மாநில செயற்குழு உறுப்பினா் முபாரக் கண்டன உரையாற்றினாா். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளா் முபாரக் நன்றி கூறினாா்.
பாஜகவைச் சோ்ந்த நூபுா் சா்மா, நவீன்குமாா் ஜிண்டால் ஆகியோா் நபிகள் நாயகம் குறித்து கூறிய சா்ச்சைக்குரிய கருத்துக்கு சா்வதேச அளவில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனா். இவா்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.