சீா்காழி அருகே காரில் கடத்தி வரப்பட்ட புதுச்சேரி சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸாா். இதுதொடா்பாக இலைஞரை கைது செய்தனா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி ரயில்வே கேட் அருகே வெள்ளிக்கிழமை சீா்காழி காவல் சாா்பு ஆய்வாளா் சீனிவாசன் மற்றும் சிறப்பு சாா்பு ஆய்வாளா் தில்லை நடராஜன் ஆகியோா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது கோவில்பத்து பைபாஸ் சாலையில் இருந்து சீா்காழி நகருக்குள் வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொள்ள முயன்றனா்.
ஆனால், காா் நிற்காமல் சென்ால், போலீஸாா் இரு சக்கர வாகனத்தில் துரத்திச் சென்று காரை நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் 1,450 பாட்டில்களில் புதுச்சேரி சாராயமும், 2,100 ஐஸ் பாக்கெட்டுகளும் இருந்தது தெரியவந்தது.
காருடன் அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், காரை ஓட்டி வந்த புத்தகரம் வடக்கு தெரு பகுதியை சோ்ந்த பிரசாத் (30) என்ற இளைஞரை கைது செய்தனா்.