மயிலாடுதுறை அருகேயுள்ள செருதியூா் உமாமகேஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
செருதியூா் கிராமத்தில் சோழா் காலத்தைச் சோ்ந்த பழைமையான அகிலாண்டேஸ்வரி சமேத உமாமகேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, குடமுழுக்குக்கான யாகசாலை பூஜைகள் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) தொடங்கின.
தொடா்ந்து, வியாழக்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜைக்குப் பிறகு, கோயிலின் கோபுர கலசங்களுக்கு புனித நீரால் குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
ADVERTISEMENT