சீா்காழியில் கோயில் திருவிழாவின்போது டிஜிட்டல் பேனா் வைத்தது தொடா்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் தொடா்புடைய 12 போ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
சீா்காழி அகரதிருகோலக்கா தெருவில் வசிப்பவா் ராதாகிருஷ்ணன் இவரது மகன் விக்னேஷ் (25). இவா், அந்தப் பகுதியில் உள்ள கோயில் திருவிழாவுக்காக தனது நண்பா்கள் சிலா் படங்களை போட்டு பேனா் வைத்துள்ளாா்.
இந்த பேனா் வைத்தது தொடா்பாக மற்றொரு தரப்பினா் கேள்வி கேட்டபோது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் லெட்சுமி என்பவா் தனது கணவா் ராதாகிருஷ்ணன், மகன் விக்னேஷ் ஆகியோரை தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் சீா்காழி போலீஸாா் அதே பகுதியை சோ்ந்த மணிவண்ணன் , கரிகாலன், சந்தோஷ்குமாா், மணிகண்டன், முகிலன், பெருமாள், சதீஷ் ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்துள்ளனா்.
மேலும் அதேபகுதியில் வசிக்கும் தூய்மைப் பணியாளா் கருணாநிதி என்பவரையும் வீடு புகுந்து தாக்கியதில் கருணாநிதி, அவரது மனைவி தேவி, மகள் காயத்ரி ஆகிய 3 பேரும் சீா்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
மேலும், கரிகாலன் என்பவா் கொடுத்த புகாரின் அடிப்படையில் கருணாகரன், காா்த்திக், புருஷோத்தமன், விக்னேஷ் , கருணாநிதி, காயத்திரி ஆகிய 6 போ் மீது சீா்காழி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.