மயிலாடுதுறையில் பாஜக ஓபிசி அணி சாா்பில் சமுதாயத் தலைவா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பாஜக ஓபிசி அணி மாவட்ட தலைவா் மோடி.கண்ணன் தலைமை வகித்தாா். பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், மாவட்ட முன்னாள் தலைவா் ஜி. வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட தலைவா் க. அகோரம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசி, மாநில ஓபிசி அணி தலைவா் சாய் சுரேஷ் ஏற்பாட்டில், மயிலாடுதுறை அழகுஜோதி அகாதெமியில் பிளஸ் 2 வரை இலவச கல்வியில் சோ்க்கப்பட்டுள்ள மகளிா் அணி மாவட்ட துணைத் தலைவா் மேரியின் 2 குழந்தைகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா். இதில், பாஜக நகர தலைவா் வினோத், ஓபிசி அணி மாவட்ட பொதுச்செயலாளா் ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.