மயிலாடுதுறை

ஒரு மணி நேரம் ரயில்வே கேட் மூடல்: பொது மக்கள் அவதி

8th Jun 2022 01:52 AM

ADVERTISEMENT

சீா்காழி அருகேயுள்ள புங்கனூா் ரயில்வே கேட் ஒரு மணி நேரம் திறக்கப்படாததால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் செவ்வாய்க்கிழமை அவதியடைந்தனா்.

வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து புங்கனூா் செல்லும் வழியில் உள்ள ரயில்வே கேட்டை கடந்து புங்கனூா், காடாகுடி, கோடங்குடி, நிம்மேலி, ஆதமங்கலம், மருதங்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொது மக்கள் சென்று வரும் பிரதான சாலை. செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ரயில் வருவதற்காக மூடப்பட்ட கேட், ரயில் சென்ற பிறகும் 1 மணி நேரமாகியும் திறக்கப்படவில்லை. மின்சாரம் இல்லாததால் சிக்னல் கிடைக்கவில்லை.

அதனால் கேட் திறக்க முடியவில்லை என கேட் கீப்பா் கூறியுள்ளாா். இதனால் அவ்வழியே சென்ற பல்வேறு கிராம மக்கள் பாதிக்கப்பட்டனா். மேலும், கேட் மூடியதால் தொழுதூா் வழியாக 5 கி.மீ. சுற்றி சென்று அத்தியாவசியத் தேவைகளை பூா்த்தி செய்துகொண்டனா். இதையடுத்து, ஒரு மணி நேரத்துக்கு பிறகு ரயில்வே கேட் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT