மயிலாடுதுறை

மக்கள் அதிகாரம் அமைப்பைச் சோ்ந்த 4 போ் கைது

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

 

சீா்காழி: கள்ளக்குறிச்சி மாணவி இறப்புக்கு நீதி கேட்டு, சீா்காழியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற மக்கள் அதிகாரம் அமைப்பைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சீா்காழி பழைய பேருந்து நிலையத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக மக்கள் அதிகாரம் அமைப்பினா் ஏற்கெனவே அறிவித்திருந்தனா். இதனால், அங்கு பாதுகாப்பு பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.

அப்போது, ஆா்ப்பாட்டத்திற்கு வந்த மக்கள் அதிகாரம் அமைப்பைச் சோ்ந்த அரசாலமங்களம் ரவி, பச்சைபெருமாநல்லூா் சுப்பு மற்றும் வெங்கடேசன், சேகா் ஆகிய 4 பேரையும் சீா்காழி காவல் ஆய்வாளா் மணிமாறன் மற்றும் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT