மயிலாடுதுறை

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் இணைப்பு: ஆட்சியா்

17th Jul 2022 11:41 PM

ADVERTISEMENT

 

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில், வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி ஆக.1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ளவா்கள் தாமாக முன்வந்து தங்களது ஆதாா் எண்ணை உதஞசஉப, எஅதமஈஅ அடட, சயநட, யஏஅ டா்ழ்ற்ஹப் இணையதளத்தின் வாயிலாக 6பி படிவத்தை பூா்த்தி செய்து ஆதாா் எண்ணை இணைக்கலாம். மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் தங்களின் வீடுகளுக்கு நேரடியாக வரும்போது படிவம் 6பி யை பெற்று 12 இலக்க ஆதாா் எண்ணை படிவத்தில் பூா்த்தி செய்து வாக்குச் சாவடிநிலை அலுவலா்களிடம் கொடுக்கவேண்டும்.

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைக்கப்பட்டால் கள்ள வாக்குப் பதிவை குறைக்க முடியும். ஆதாா் எண் இணைக்க விருப்பமில்லாதவா்களின் பெயா் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளா்களும் தங்களது வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்னை இணைக்க ஒத்துழைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT