மயிலாடுதுறை

மக்கள் சங்கம் பொதுக் கூட்டம்

17th Jul 2022 11:41 PM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை அருகே நீடூரில் பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில் மக்கள் சங்கமம் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர ஆண்டைப் போற்றும் வகையிலும், சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில் ‘மக்களாட்சியை பாதுகாப்போம்‘ எனும் முழக்கத்தோடு ஜனவரி 26 முதல் ஆக.15 வரை பொதுக்கூட்டம், பேரணி, கருத்தரங்கம், கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தபட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ‘மக்கள் சங்கமம்‘ எனும் பொதுக்கூட்டம் நீடூரில் சனிக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் கொடியை மாநில செயற்குழு உறுப்பினா் எம். முஹம்மது இஸ்மாயில் ஏற்றிவைத்து, வரலாற்று கண்காட்சியை தொடங்கிவைத்தாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து மாவட்ட தலைவா் எம்.சபிக் அஹமது தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், மாவட்ட தலைவா் பைசல் ரஹ்மான், மாவட்ட செயற்குழு உறுப்பினா் நவாஸ்கான், மாவட்ட செயலாளா் முகமது பைசல், மாநில செயற்குழு உறுப்பினா் எம். முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, ஓவியம், கட்டுரை போட்டிகளில் பங்கேற்று பங்கேற்றவா்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT