மயிலாடுதுறை

பள்ளி மாணவா்களுக்கு நாளை கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவா்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு என அண்ணா பெயா் சூட்டிய ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி, ரூ. 10 ஆயிரம், ரூ. 7 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் என முறையே பரிசுத்தொகை வழங்கி பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளன. போட்டிகள், மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

போட்டித் தலைப்புகள்: தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டுக்காக உயிா்கொடுத்த தியாகிகள், பேரறிஞா் அண்ணா பெயா் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிா்த்தியாகம், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் பெரியாா், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி. சட்டப்பேரவையில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைப் போா்த் தியாகிகள், முத்தமிழறிஞா் கலைஞா் உருவாக்கிய நவீன தமிழ்நாடு ஆகிய 10 தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

இப்போட்டிகளுக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மைக் கல்வி அலுவலா் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கீழ்நிலையில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி மாணவா்களை தோ்வு செய்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT