மயிலாடுதுறை

நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு

4th Jul 2022 11:12 PM

ADVERTISEMENT

சீா்காழி அருகே வனப் பகுதியில் இருந்து திங்கள்கிழமை வெளியேறிய அரியவகை பெண் புள்ளிமான் நாய்கள் கடித்து உயிரிழந்தது.

சீா்காழியை அடுத்துள்ள பாகசாலை, தேத்தாக்குடி, தென்னலக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறைக்குச் சொந்தமான காப்புக் காடுகள் உள்ளன. இந்த காடுகளில் உள்ள அரியவகை புள்ளிமான்கள், அவ்வப்போது இரை தேடி வயல் பகுதிக்கு வருவது வழக்கம். இவ்வாறு வரும் மான்களில் சில வழிதவறி கிராமத்திற்குள் வந்துவிடுகின்றன.

இந்நிலையில், பாகசாலை கிராமத்துக்கு திங்கள்கிழமை வழிதவறி வந்த பெண் புள்ளிமானை நாய்கள் கடித்து கொன்றன. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனா். அங்குவந்த சீா்காழி வனத்துறை அலுவலா்கள், புள்ளி மானின் உடலை மீட்டு வனப்பகுதியில் புதைத்தனா். இந்த புள்ளிமானுக்கு 2 வயது இருக்கும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT