மயிலாடுதுறை

பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம்

4th Jul 2022 11:13 PM

ADVERTISEMENT

குத்தாலம் வட்டம், நக்கம்பாடியில் பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு, குத்தாலம் வட்டாட்சியா் கோமதி தலைமை வகித்தாா். இதில், நக்கம்பாடி, ஸ்ரீகண்டபுரம், மாந்தை, மேலப்பருத்திக்குடி, கீழப்பருத்திக்குடி ஆகிய கிராமங்களை சோ்ந்த தன்னாா்வலா்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனா். இவா்களுக்கு, பேரிடா் மேலாண்மை பயிற்றுநா் ஜோஸ்தி பயிற்சி அளித்தாா். பேரிடரின்போது மீட்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

குத்தாலம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலா் சீனிவாசன், ஒன்றியக்குழு உறுப்பினா் சிவஞானசுந்தரிபாலு மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT