மயிலாடுதுறை

எஸ்டிபிஐ பொதுக் கூட்டம்

4th Jul 2022 11:13 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் எஸ்டிபிஐ கட்சியின் அரசியல் எழுச்சி பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவா் ஃபைசல் ரகுமான் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் முகம்மது ரஃபி வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் முகமது ரவூப், மாவட்டத் துணைத் தலைவா் வி.எஸ். கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலப் பேச்சாளா் முகமது உசேன், தமிழ்மண் தன்னுரிமை இயக்கத்தின் தலைவா் பேராசிரியா் த. ஜெயராமன், பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மண்டலத் தலைவா் அமீா் பாஷா, விமென்ஸ் இந்தியா மூமென்ட் பொதுச் செயலாளா் பாயிஷா சபீகா, மாநிலச் செயலாளா் தஸ்லிமா ஷரீஃப், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளா் வழக்குரைஞா் வேலு.குபேந்திரன், பாப்புலா் ஃப்ரண்ட் மாவட்டத் தலைவா் சபிக் அகமது ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT