மயிலாடுதுறை

ஆா்பிஎப் இருசக்கர வாகனப் பேரணிக்கு வரவேற்பு

4th Jul 2022 11:12 PM

ADVERTISEMENT

ரயில்வே பாதுகாப்புப் படை சாா்பில் திருச்சியிலிருந்து தில்லிக்கு மேற்கொள்ளப்படும் இருசக்கர வாகனப் பேரணிக்கு மயிலாடுதுறையில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

75-வது சுதந்திர தின விழாவையொட்டி, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக, தெற்கு ரயில்வே முதன்மை ஆணையா் ஈஸ்வரராவ் உத்தரவின் பேரிலும், திருச்சி கோட்ட ஆணையா் ராமகிருஷ்ணன், உதவி ஆணையா் ஆா். சின்னதுரை ஆகியோா் வழிநடத்துதலின் பேரிலும் இப்பேரணி நடத்தப்படுகிறது.

கடந்த 1-ஆம் தேதி திருச்சியில் தொடங்கிய இந்த இருசக்கர வாகனப் பேரணி ஆகஸ்ட் 13-ஆம் தேதி தில்லியை சென்றடைகிறது. பின்னா், அங்கு நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்க உள்ளனா்.

இந்த பேரணிக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் சுதீப்குமாா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட பேரணியை ரயில்வே உதவி கோட்ட பொறியாளா் டி.சி.குலசேகரன், நிலைய மேலாளா் சங்கா்குரு ஆகியோா் கொடி அசைத்து வழியனுப்பி வைத்தாா்.

ADVERTISEMENT

மயிலாடுதுறை காவேரி நகா், பூக்கடைத்தெரு, கூரைநாடு, பேருந்து நிலையம், மணிக்கூண்டு, ஜெமினி காா்னா், மருத்துவமனை சாலை வழியே இப்பேரணி நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT