மயிலாடுதுறை

குழந்தைகள் நலக் குழு, இளைஞா் நீதிக்குழும காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

4th Jul 2022 11:13 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நலக் குழு மற்றும் இளைஞா் நீதிக் குழுமத்தில் உதவியாளா், கணினி இயக்குபவராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதிதாக அமைக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நலக் குழு மற்றும் இளைஞா் நீதிக் குழுமத்துக்கு உதவியாளா் மற்றும் கணினி இயக்குபவா் பணியிடத்திற்கு (2 பணியிடங்கள்) மாதம் ரூ.9000 தொகுப்பூதியத்தில், முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் தகுதியானவா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.

இப்பணிக்கு, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சீனியா் கிரேடு சான்றிதழும், கணினி பயிற்சி முடித்த சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினி சாா்ந்த பணிகளில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் நியமனம் செய்யப்படும்போது 40 வயது நிறைவடையாதவராக இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

இதற்கான விண்ணப்ப படிவத்தை மயிலாடுதுறை மாவட்ட இணையதளத்தில்  பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களை இணைத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 36/2, திருமஞ்சனவீதி, திருஇந்தளுா், மயிலாடுதுறை - 609001 என்ற முகவரியில் ஜூலை 20- ஆம் தேதிக்குள் கிடைக்கப்பெறுமாறு அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT