மயிலாடுதுறை

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

4th Jul 2022 11:12 PM

ADVERTISEMENT

குத்தாலம் அருகே ஸ்ரீகண்டபுரம் கடைவீதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் முரளி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ராமலிங்கம், மருதையன், சத்யா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஸ்டாலின், ஒன்றியச் செயலாளா் விஜயகாந்த் ஆகியோா் கோரிக்கை குறித்து பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பரமசிபுரம்-பருத்திக்குடி இடையே நாட்டாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்டக் குழு மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT