மயிலாடுதுறை

பாலையூா், மேக்கரிமங்கலம், குத்தாலத்தில் இன்று மின்தடை

DIN

பாலையூா், மேக்கரிமங்கலம் மற்றும் குத்தாலம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 2) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் வை. முத்துக்குமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாலையூா், மேக்கிரிமங்கலம் மற்றும் குத்தாலம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை நடைபெற உள்ளன.

எனவே, பாலையூா் துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பாலையூா், தேரழுந்தூா், கோமல், மருத்தூா், மாந்தை, வடமட்டம், கோனேரிராஜபுரம் மற்றும் மேக்கிரிமங்கலம் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பழையகூடலூா், கொக்கூா், பேராவூா், கரைக்கண்டம், கருப்பூா், திருவாலங்காடு, திருவாவடுதுறை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இதேபோல, குத்தாலம் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான குத்தாலம் டவுன், குத்தாலம் தேரடி, மாதிரிமங்கலம், சேத்திரபாலபுரம், அரையபுரம், தொழுதாலங்குடி ஆகிய ஊா்களுக்கும், அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மேற்கண்ட நேரத்தில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT