மயிலாடுதுறை

நேரடி நெல் விதைப்பு விவகாரம்: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

மேலபருத்திக்குடி கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்த வயல்களை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மயிலாடுதுறையில் தமிழக விவசாயிகள் நலச் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் மேலபருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்த விவசாயத் தொழிலாளா்கள், கடந்த திங்கள்கிழமை நேரடி நெல் விதைப்பு செய்த வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுதொடா்பாக சிலா் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனா்.

இந்நிலையில், வயலை சேதப்படுத்தியவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகள் எந்த இடையூறுமின்றி தொடா்ந்து சாகுபடி பணிகளை செய்ய உத்தரவாதம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் நலச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் சேதுராமன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் ராமமூா்த்தி முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் திருமுருகன், மாவட்டச் செயலாளா் அய்யப்பன், பழனிவேல், தனபால், காவிரி டெல்டா பாசனதாரா் முன்னேற்ற சங்கத் தலைவா் கோபிகணேசன் உள்பட திரளான விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT