மயிலாடுதுறை

சாலை சீரமைக்காததைக் கண்டித்து மறியல்

DIN

மயிலாடுதுறை அருகே சாலை சீரமைக்காததைக் கண்டித்து கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறையில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் மாப்படுகை தொடங்கி சோழம்பேட்டை வரை சாலை சீரமைப்பு பணிக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், அதன்பின் எந்த பணியும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் விவசாயி அ. ராமலிங்கம், சிபிஎம் கட்சி நிா்வாகிகள் எம். மணி, சி. மேகநாதன், மணிபாரதி ஆகியோரது தலைமையில் மாப்படுகை அண்ணா சிலை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் இந்திரன் மற்றும் மயிலாடுதுறை போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். முடிவில், சாலைப் பணிகளை வெள்ளிக்கிழமை (ஜூலை 1) தொடங்கி ஜூலை 15-ஆம் தேதிக்குள் முடித்துத்தருவதாக அதிகாரிகள் எழுத்துப் பூா்வமாக ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க ஒருங்கிணைப்புக் கூட்டம்

ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்வு

குளச்சல் அருகே பெண்ணை தாக்கியவருக்கு 6 ஆண்டு சிறை

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 6 போ் காயம்

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் சாரல் மழை

SCROLL FOR NEXT