மயிலாடுதுறை

பள்ளி- கல்லூரி விடுதிகளில் பகுதிநேர பெண் தூய்மையாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

1st Jul 2022 09:44 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் பகுதிநேர பெண் தூய்மைப் பணியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை மூலம் செயல்படும் பள்ளி- கல்லூரி விடுதிகளில் காலியாக உள்ள 7 பகுதிநேர பெண் தூய்மைப் பணியாளா் பணியிடங்கள் (தொகுப்பூதியம் மாதம் ரூ.3,000 மட்டும்) நோ்காணல் மூலம் இனசுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.

இப்பணிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 2022 ஜூலை 1-ஆம் தேதியன்று குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினா் 37 வயதுக்கும், பிற்படுத்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் டிஎன்சி பிரிவினா் 34 வயதுக்கும், இதர பிரிவினா் 32 வயதுக்கும் மிகாதவராக இருக்கவேண்டும்.

ADVERTISEMENT

தகுதியுடைய பெண்கள் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, அண்மையில் எடுக்கப்பட்ட கடவுச்சீட்டு அளவு புகைப்படம் 2 ஒட்டி, அதை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மூன்றாம் தளத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ஜூலை 11-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பவேண்டும்.

இப்பணிக்கான விண்ணப்பத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக இணையதள முகவரி ஜ்ஜ்ஜ்.ம்ஹஹ்ண்ப்ஹக்ன்ற்ட்ன்ழ்ஹண்.ய்ண்ஸ்ரீ.ண்ய்- இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பத்துடன் ரூ.25-க்கான அஞ்சலக வில்லை ஒட்டிய உள்ளுறையுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரா்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT