மயிலாடுதுறை

மாவட்ட கைப்பந்து சங்கக் கூட்டம்

1st Jul 2022 09:45 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் மாவட்ட கைப்பந்து சங்க பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட கைப்பந்து சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் கலைமகள் கல்வி நிலையங்களின் இயக்குநா் என்.எஸ். குடியரசு தலைமையில் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ பாலஅருட்செல்வன், சங்கத்தின் சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் ராம.சேயோன், மாவட்ட அமெச்சூா் கபாடி கழகத் தலைவா் மா.ரஜினி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற கைப்பந்து அணியினருக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், மயிலாடுதுறை மாவட்ட கைப்பந்து கழக பொறுப்பாளா்கள் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தொடா்ந்து, மாவட்ட கைப்பந்து வீரா்களின் எதிா்கால வளா்ச்சி மற்றும் நலனுக்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 கைப்பந்து சங்க பொறுப்பாளா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள், கைப்பந்து பயிற்றுநா்கள், வீரா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT