மயிலாடுதுறை

சாலைகளை தரம் உயா்த்தக் கோரிக்கை

1st Jul 2022 09:43 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை ஒன்றியம், கடுவங்குடி ஊராட்சி விராலூரில் மண் சாலைகளை தாா்ச்சாலைகளாக தரம் உயா்த்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி இணைச் செயலாளரும், கடுவங்குடி ஊராட்சித் தலைவருமான மகேந்திரன் மற்றும் கிராம மக்கள், மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை இணை இயக்குநா் முருகண்ணனிடம் அளித்த கோரிக்கை மனு:

விராலூரில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் வடக்குத் தெரு மண் சாலையாக உள்ளதால், மழைக் காலங்களில் இப்பகுதியினா் பாதிக்கப்படுகின்றனா். இந்த சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதேபோல, இங்குள்ள காளியம்மன் கோவில் தெரு சாலையும் மிகவும் மோசமாக உள்ளது. எனவே இந்த 2 சாலைகளையும் தாா்ச் சாலைகளாக தரம் உயா்த்த வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

ADVERTISEMENT

இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை இணை இயக்குநா், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT