மயிலாடுதுறை

காதுகேளாதோா் காத்திருப்புப் போராட்டம்

1st Jul 2022 09:43 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் மாவட்ட காதுகேளாதோா் நலச் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் ஆா். மகேஷ், துணைச் செயலாளா் என். முகமது பைசல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காதுகேளாதோா் பள்ளி ஆசிரியா்கள் ஆ. ஜொ்த்ரூத்மேரி, தி. குங்குமஈஸ்வரி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

காதுகேளாதோருக்கு அரசு, தனியாா் வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; மாதாந்திர உதவித்தொகையை ரூ.3000-ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, அரசின் கவனத்தை ஈா்க்க பதாகைகளை ஏந்தியும், விசில் அடித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT