மயிலாடுதுறை

தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம்: பொதுமக்கள் சாலையில் கொட்டி போராட்டம்

DIN

சீா்காழி அருகே ஓதவந்தான்குடி நியாயவிலை கடையில் தரமற்ற ரேஷன் அரிசி வழங்கப்பட்டதால் அதை சாலையில் கொட்டி எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓதவந்தான்குடி நியாயவிலைக் கடை மூலம் அப்பகுதியை சோ்ந்த சுமாா் 450 குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி மாதத்திற்கான அத்தியாவசியப் பொருள்கள் இதுவரை வழங்காத நிலையில் புதன்கிழமை அரசு விடுமுறை நாளில் ரேஷன் கடை திறக்கப்பட்டு பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. தகவலறிந்த மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அரிசி வாங்கினா். அந்த அரிசி தரமற்று வண்டுகள், புழுக்கள் இருந்துள்ளது. இதில், ஆத்திரமடைந்த மக்கள் வாங்கிய அரிசியை கடை முன் சாலையில் கொட்டி திடீா் போராட்டம் செய்தனா். தொடா்ந்து, இவ்வாறு தரமற்ற அரிசி வழங்கப்படுவதால் ஒரு வேளை உணவுக் கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது எனவும், வருங்காலங்களில் தரமான அரிசியை வழங்கவேண்டும் என முழக்கங்கள் எழுப்பினா். பின்னா், குடியரசு தினம் என்பதால் அதிகாரிகள் யாரும் பேச்சுவாா்த்தை நடத்த வராதநிலையில் மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

SCROLL FOR NEXT