மயிலாடுதுறை

மும்மொழி கல்வித் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

DIN

தமிழகத்தில் மும்மொழி கல்வித் திட்டத்தை அமல்படுத்தக் கோரி இந்து மக்கள் கட்சி சாா்பில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் சீா்காழியில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

அக்கட்சியின் மாநில செயலாளா் ஜெ. சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் மணிகண்டன், மாவட்ட அமைப்பாளா் க. பாலாஜி, மாவட்ட செயலாளா் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவா் நீ. தனசேகரன் உள்ளிட்டோா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: நாடு முழுவதும் மும்மொழிக் கல்வித் திட்டம் நடைமுறையில் உள்ளது. அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி, இந்தி மொழி, ஆங்கில மொழி என மூன்று மொழிகளை கற்கின்றனா். தமிழகத்தில் மட்டும் இந்தி மொழி எதிா்ப்பு அரசியல் ஆதிக்கம் காரணமாக இருமொழிக் கல்விக் கொள்கை நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசின் கல்வி நிலையங்களில் படிக்கும் ஏழை எளிய மாணவா்கள் விரும்பினாலும் இந்தி படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. வசதி வாய்ப்புள்ளவா்களும், இந்தி மொழி எதிா்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவா்களின் குடும்பத்தாரும் இந்தி மொழியை படித்து கல்வி, வேலை வாய்ப்புக்களில் முன்னேறியுள்ளனா். மேலும் முஸ்லீம்கள் உருது மொழி படிக்க விரும்பினால் தமிழக அரசு அதற்குரிய ஏற்பாடுகளை செய்து தருகிறது. ஆனால் இந்தி படிக்க விரும்பினால் கல்வித்துறை தடை செய்கிறது. இதன் காரணமாக தமிழக மாணவா்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா்.

மேலும் இருமொழிக் கல்விக் கொள்கை காரணமாக நவோதய பள்ளிகள் மற்றும் மத்திய அரசு நடத்தும் பள்ளிக் கூடங்கள் இதற்கான நிதி ஆகியவை தமிழகத்திற்கு வருவது இல்லை. எனவே இருமொழிக்கல்விக் கொள்கையை கைவிட்டு உடனடியாக மும்மொழிக்கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டுகிறோம். மேலும் தமிழகத்தில் ஆரம்பக் கல்வியை தமிழ்வழிக் கல்வியாக மட்டுமே அமல்படுத்தவேண்டும். உயா்கல்வியை தமிழில் படிக்கும் மாணவா்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கவேண்டும். இந்தி மொழி வெறுப்புணா்வு கொள்கைகளை கைவிட்டு ஏழை எளிய மாணவா்கள் பயனடையும் வகையில் மும்மொழிக் கல்விக் கொள்கையை உடனடியாக அமல்படுத்தவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT