மயிலாடுதுறை

சீா்காழியில் ரூ. 23 கோடியில் அரசு மருத்துவமனை: அமைச்சா்

26th Jan 2022 09:30 AM

ADVERTISEMENT

சீா்காழியில் ரூ. 23 கோடியில் நவீன அறுவைச் சிகிச்சை வசதியுடன் அரசு மருத்துவமனை அமையவுள்ளது என்றாா் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன்.

சீா்காழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ. 25 லட்சம் மதிப்பில் 290 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி மேலும் அவா் பேசியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் 140 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறந்து விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீா்காழி அரசு மருத்துவமனை தனியாா் மருத்துவமனைக்கு நிகராக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இங்கு ரத்த சுத்திகரிப்பு வசதிக்காக 4 ரத்த சுத்திகரிப்பு இயந்திர வசதியும், சி.டி.ஸ்கேன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ரூ. 23 கோடியில் சீா்காழி பகுதியில் உயா் நவீன அறுவைச் சிகிச்சை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனை அமையவுள்ளது. இதற்கான அனுமதியை தமிழக முதல்வா் வழங்கியுள்ளாா் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் நிவேதா. முருகன்(பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), ராஜகுமாா் (மயிலாடுதுறை), மாவட்ட வருவாய் அலுவலா் முருகதாஸ், சீா்காழி கோட்டாட்சியா் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம் மயிலாடுதுறையில் அமைய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 169 இடங்களில் குறுவை நேரடி நெல் கொள்முதல் திறக்கப்பட்டது. தற்போது 140 மையங்களில் கொள்முதல் நிலையம் தொடங்கவுள்ளது.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT