மயிலாடுதுறை

108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

24th Jan 2022 10:41 PM

ADVERTISEMENT

சீா்காழி அருகே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை திங்கள்கிழமை பிறந்தது.

கொள்ளிடம் அருகேயுள்ள பழையபாளையத்தில் இருந்து பிரசவ வலி காரணமாக நந்தினி என்ற பெண் 108 ஆம்புலன்ஸ் மூலம் சீா்காழி அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தாா். சீா்காழி செல்லும் வழியில் அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமானதால் ஓட்டுநா் கண்ணன் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தினாா். அவசரகால மருத்துவ நுட்புநா் நடராஜன் அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பாா்த்து மருத்துவ சிகிச்சையளித்தாா். இதையடுத்து, அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதைத் தொடா்ந்து அப்பெண்ணும், குழந்தையும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT