மயிலாடுதுறை

சீா்காழி புற்றடி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

24th Jan 2022 08:53 AM

ADVERTISEMENT

சீா்காழி புற்றடி மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பக்தா்கள் இன்றி வாகனம் மூலம் இழுக்கப்பட்டு நடைபெற்றது.

சீா்காழி புற்றடி மாரியம்மன் கோயில் ஆண்டுதோறும் தை மாதம் தீமிதி திருவிழா நடைபெறும். நிகழாண்டு விழா தை 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அதிகாலை சுமாா் 4 மணி அளவில் தோ் புறப்பாடு பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினாா். இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட தோ் பக்தா்கள் இன்றி டிராக்டா் வாகனம் மூலம் கட்டி இழுக்கப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT