மயிலாடுதுறை

குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் துா்நாற்றம்

24th Jan 2022 08:54 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை அருகே கோழிகுத்தி கிராமத்தில் உள்ள குளத்தில் 3 நாள்களாக செத்து மிதக்கும் மீன்களால் துா்நாற்றம் வீசுவதால், அவற்றை அப்புறப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சோழம்பேட்டை ஊராட்சி கோழிகுத்தி கிராமத்தில் உள்ள பெரியகுளம் 3 ஏக்கா் பரப்பளவில் உள்ளது. இக்குளம் மீன்வளா்ப்புக்காக தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்தக் குளத்தில் வெள்ளிக்கிழமை மீன்கள் ஆங்காங்கே செத்து மிதக்கத் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை ஏராளமான மீன்கள் செத்து மிதந்ததால் அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசியது.

இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி நிா்வாகத்தில் புகாா் தெரிவித்தனா். தொடா்ந்து, குத்தகைதாரரான இளங்கோ என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை நோய்த்தொற்று பரவுவதற்கு முன்னதாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT