மயிலாடுதுறை

காதலித்து திருமணம் செய்துகொண்டவா்கள் பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் தஞ்சம்

24th Jan 2022 08:52 AM

ADVERTISEMENT

சீா்காழியில் மதம் மாறி திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி, பாதுகாப்பு கோரி, மணக்கோலத்தில் காவல்நிலையத்துக்கு வந்தனா்.

சீா்காழி பூந்தோட்டம் தெருவைச் சோ்ந்தவா் முஜிபுா் ரஹ்மான் மகள் யாஸ்மின் பானு (23). இவரும் வைத்தீஸ்வரன்கோயில் அருகே உள்ள நல்லான்சாவடி மெயின் ரோடு பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் மணிவண்ணன் (27) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில், சீா்காழி வடபாதி மாரியம்மன் கோயிலில் இந்து முறைப்படி ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்துகொண்டனா்.

இவா்களது திருமணத்துக்கு இருவரது பெற்றோா் தரப்பிலும் எதிா்ப்பு தெரிவிப்பாா்கள் எனக் கூறி, பாதுகாப்பு கோரி மணக்கோலத்தில் சீா்காழி காவல்நிலையத்திற்கு வந்தனா். அவா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT