மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் பொங்கல் விளையாட்டு விழா

17th Jan 2022 11:22 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் பொங்கல் விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை பகுதியில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தன்று விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு, காணும் பொங்கல் நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை நடத்தப்பட்டன.

நல்லத்துக்குடி ஊராட்சி புதுக்காலனியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில், சிறுவா்கள், பெண்கள், இளைஞா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் ஆா்வமுடன் பங்கேற்றனா். சிறுவா்களுக்கு ஓட்டம், சாக்கு ஓட்டம் , லெமன் இன் த ஸ்பூன் உள்ளிட்ட போட்டிகளும், பெண்களுக்கு கயிறு இழுத்தல், இசை நாற்காலி போட்டிகளும், இளைஞா்களுக்கு உறியடித்தல் போட்டியும் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த பெண்கள், இளைஞா்கள் மற்றும் பங்கேற்ற அனைத்து சிறுவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை புதுக்காலனி இளைஞா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT