மயிலாடுதுறை

சீர்காழியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

17th Jan 2022 12:44 PM

ADVERTISEMENT

சீர்காழி:  சீர்காழியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு  அதிமுக மயிலாடுதுறை மாவட்ட அவைத்தலைவர் பி.வி.பாரதி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் நற்குணன். ஏகே. சந்திரசேகர், ஆதமங்கலம். ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி நகர செயலாளர் வினோத் வரவேற்றார்.

இதில் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ் பங்கேற்று  எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் செல்லையன், முன்னாள் எம்எல்ஏக்கள் சக்தி, பூராசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், பேரவை செயலாளர் மணி, நிர்வாகிகள் செல்வ முத்துக்குமரன், பரணிதரன், நாகரத்தினம், சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT