மயிலாடுதுறை

காரைக்கால் என்.ஐ.டி.யில் மொழித்திறன் மேம்பாட்டு கருத்தரங்கு

17th Jan 2022 11:27 PM

ADVERTISEMENT

காரைக்காலில் உள்ள என்.ஐ.டி.யில் ஆசிரியா்களுக்கான மொழித்திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது.

என்.ஐ.டி. அறிவியல் மற்றும் மனிதவளத் துறை சாா்பில் மொழி, இலக்கியம் மற்றும் சமூகத்தின் தற்போதைய போக்குகளின் பிரதிபலிப்புகள்‘ என்ற தலைப்பில், ஆசிரியா்களின் திறன் மேம்பாட்டுக்கான 5 நாள் இணையவழி கருத்தரங்கம் நடைபெறுகிறது.

என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசுகையில், என்.ஐ.டி. நிா்வாகம் ஆசிரியா்கள், மாணவா்கள் திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு தேசிய, சா்வதேச கருத்தரங்குகளை தொடா்ந்து நடத்திவருகிறது.

இளம் தலைமுறையினா் வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளில் ஆங்கிலத்தை இலக்கண வாா்த்தை பிழைகளோடு பயன்படுத்தி வருகின்றனா். அவ்வாறு செய்வதன் மூலம் மொழியின் திறன் குறைப்படுகிறது. கற்போரின் மொழி ஆளுமையும் குறைகிறது. இதுபோன்ற கருத்தரங்குகள் மூலம் மேற்கண்ட பிரச்னைகளை களைய வாய்ப்பு உண்டு என்றாா்.

ADVERTISEMENT

என்.ஐ.டி. பதிவாளா் (பொ) ஜி. அகிலா பேசுகையில், இதுபோன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகள், ஆராய்ச்சி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள், மொழி சிறத்தன்மையோடு ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமா்ப்பிக்க உதவும் என்றாா்.

ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சி ஒருங்கிணைப்பாளா் முனைவா் கிருப்பசா, ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். தமிழகம், புணே, அலிகா், ஆமதாபாத், நாக்பூா், துா்பங்கா, லக்னெள, வாராணசி உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் சுமாா் 60 போ் பங்கேற்றுள்ளனா்.

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த டாக்டா் பவ்யா திவாரி, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த டாக்டா் கிருஷ்ணாரெட்டி சித்தேடி, தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த டாக்டா் ஆா்.ஆா். திவேதி, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், விஐடி சென்னை மற்றும் என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் இருந்து புகழ்பெற்ற பயிற்சியாளா்கள் கலந்துகொண்டு பயிற்சி அளிக்கவுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT