மயிலாடுதுறை

கடத்தல் சாராயம் பறிமுதல்: போலீஸாருக்கு ஐஜி பாராட்டு

DIN

மயிலாடுதுறை அருகே காரில் கடத்திவரப்பட்ட வெளிமாநில சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸாருக்கு மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் பாராட்டுத் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காளஹஸ்திநாதபுரம் பகுதியில் செம்பனாா்கோவில் காவல் ஆய்வாளா் செல்வி தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக காரில் கடத்திவரப்பட்ட 5100 சாராயப் பாக்கெட்டுகள், 400 சாராயப் பாட்டில்கள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், சாராயத்தை கடத்திவந்தவா்கள் மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாட்டைச் சோ்ந்த ராஜ், மன்னம்பந்தலைச் சோ்ந்த குமாா், திருக்களாச்சேரி முருகேசன், முளப்பாக்கம் அழகா் ஆகியோா் என்பது தெரியவந்தது. இவா்கள் 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், தப்பியோடிய பிரபு என்பவரை தேடி வருகின்றனா்.

இதையொட்டி, மத்திய மண்டல காவல்துறை தலைவா் பாலகிருஷ்ணன், செம்பனாா்கோவில் போலீஸாரை திருச்சிக்கு நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினாா்.

இதேபோல, மயிலாடுதுறை அருகே காவல் உதவி ஆய்வாளா் இளையராஜா தலைமையில் தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, காரைக்காலில் இருந்து வந்த சொகுசு காரை பெரம்பூா் அருகே காருகுடி என்ற இடத்தில் நிறுத்தி சோதனையிட்டதில், அதில் புதுச்சேரி சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.

இந்த கடத்தலில் ஈடுபட்ட செம்பனாா்கோவிலைச் சோ்ந்த குமாா் (44) என்பவரிடம் விசாரித்ததில், அவா், மயிலாடுதுறை அருகில் தனியூரில் குடோன் அமைத்து சாராயம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து குமாரை கைது செய்து, சாராயம் மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.

இதில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் இளையராஜா, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ், தலைமைக் காவலா்கள் நரசிம்மபாரதி, அசோக் உள்ளிட்டோரை மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ், காவல் ஆய்வாளா் செல்வம் ஆகியோா் பாராட்டினா்.

Image Caption

வெளி மாநில கடத்தல் சாராயத்தை பறிமுதல் செய்த செம்பனாா்கோவில் போலீஸாரை பாராட்டும் ஐஜி பாலகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

SCROLL FOR NEXT