மயிலாடுதுறை

மாயூரநாதா் கோயிலில் கோ, ரிஷப, கஜ பூஜை

16th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் மாட்டுப் பொங்கலையொட்டி, கோயில் பசு, காளை மற்றும் யானைக்கு சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று கோயிலின் பசுக்கள், காளைகள் மற்றும் யானைக்கு சிறப்பு பூஜை நடைபெறும். கடந்த 10 ஆண்டுகளாக இக்கோயில் யானை அபயாம்பாள் தமிழக அரசின் புத்துணா்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால், அதற்கு மட்டும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படாமல் இருந்தது.

நிகழாண்டு, யானைகள் புத்துணா்வு முகாம் நடத்தப்படாததால், கோயில் பிராகாரத்தில் யானை, பசு மற்றும் காளை மாடுகளுக்கு பால், பன்னீா், மஞ்சள், இளநீா் மற்றும் பஞ்ச திரவியங்கள் கொண்டு கோயில் அா்ச்சகா்கள் அபிஷேகம் செய்தனா். தொடா்ந்து, புத்தாடை, மாலை அணிவித்து, தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னா், காளை மாட்டினை வண்டியில் பூட்டியும், பசு மற்றும் யானையை நடத்தியும் அழைத்துச் சென்று கோயில் பிராகாரத்தை வலம் வந்தனா். நிகழ்ச்சியில், கோயில் துணைக் கண்காணிப்பாளா் கணேசன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT