மயிலாடுதுறை

குழந்தைகள் காப்பகத்தில் புத்தாண்டு கொண்டாடிய ஆட்சியா்

1st Jan 2022 09:32 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் உள்ள அன்பகம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா ஆங்கிலப் புத்தாண்டை சனிக்கிழமை கொண்டாடினாா்.

மயிலாடுதுறை, தரங்கம்பாடி சாலையில் அன்பகம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு, 250-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் தங்கியுள்ளனா். 50-க்கும் மேற்பட்ட காப்பாளா் மற்றும் பணியாளா்கள் இங்கு சேவை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், தனது மகள் தருணிகாவுடன் அங்கு வந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, அங்குள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டியும், இனிப்பு மற்றும் பழங்கள் வழங்கியும், வாழ்த்துகள் கூறியும் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT