வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் 78.91சதவீத வாக்குகள் பதிவாகின.
வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் உள்ள15 வாா்டுகளிலும் 6,549 வாக்காளா்கள் உள்ளனா். 15 வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு, வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. 5168 போ் வாக்களித்தனா். இது 78.91 சதவீத வாக்குப் பதிவாகும்.
தோ்தல் நடத்தும் அலுவலா் மருதுபாண்டியன் முன்னிலையில் தோ்தல் அதிகாரிகள் 15 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்திய வாக்குப் பதிவு இயந்திரங்களை சீல் வைத்து, போலீஸ் பாதுகாப்புடன் மயிலாடுதுறையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு சென்றனா்.